தமிழ் மோட்டிவேஷனல் Quotes - Motivational Quotes in Tamil

தமிழ் மோட்டிவேஷனல் Quotes - Motivational Quotes in Tamil

Here are the Latest Collection Motivational Quotes in Tamil.

Tamil Motivational quotes in tamil font

  • தமிழ் Quotes
  •  Motivational Quotes and Status

Tamil Motivational quotes


எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு...


எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது


இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் 💭 முளைப்பது இருளில் தான்


சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை
விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்...


ஒளியாக நீயிருப்பதால்
இருளைபற்றிய கவலை எனக்கில்லை...


பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...


நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது...


துன்பம் நம்மை சூழ்ந்த போதும்
மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...


தனித்து போராடி கரைசேர்ந்த பின்
திமிராய் இருப்பதில் தப்பில்லையே


எப்போதும் என்
அடையாளத்தை
யாருக்காகவும் விட்டு
கொடுக்க மாட்டேன்


முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்
வலிகளும் பழகிப்போகும்...


அடுத்தவரோடு ஒப்பிட்டு
உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே
உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே...


பல முறை முயற்சித்தும்
உனக்கு தோல்வி என்றால்
உன் இலக்கு தவறு
சரியான இலக்கை தேர்ந்தெடு..


வேதனைகளை ஜெயித்துவிட்டால்
அதுவே ஒரு சாதனைதான்...


உன்னால் முடியும்
என்று நம்பு...
முயற்சிக்கும் அனைத்திலும்
வெற்றியே...


எந்த சூழ்நிலையையும்
எதிர்த்து நிற்கலாம்
தன்னம்பிக்கையும் துணிச்சலும்
இருந்தால்......


குறி தவறினாலும்
உன் முயற்சி
அடுத்த வெற்றிக்கான
பயிற்சி......


ஒரு நாள்
விடிவுகாலம் வரும்
என்றநம்பிக்கையில் தான்
அனைவரின் வாழ்க்கையும்
நகர்ந்துக்கொண்டிருக்கு...


தோல்வி உன்னை துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு


உறவுகள்
தூக்கியெறிந்தால்
வருந்தாதே
வாழ்ந்துக்காட்டு
உன்னை தேடிவருமளவுக்கு...


எல்லாம் தெரியும் என்பவர்களை விட
என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே
வாழ்வில் ஜெயிக்கின்றார்...


நமக்கு நாமே
ஆறுதல் கூறும்
மன தைரியம்
இருந்தால்
அனைத்தையும் கடந்து போகலாம்...


முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்ததை
முடிக்கும் வரை...


புகழை மறந்தாலும்
நீ பட்ட அவமானங்களை மறக்காதே
அது இன்னொரு முறை
நீ அவமானப்படாமல் காப்பாற்றும்


தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்
இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்
நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்
ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்...


தன்னம்பிக்கை இருக்கும்
அளவுக்கு முயற்சியும்
இருந்தால் தான் வெற்றி
சாத்தியம்...


எல்லோரிடமும் உதைபடும்
கால்பந்தாய் இருக்காதே
சுவரில் எறிந்தால்
திரும்பிவந்து முகத்தில்
அடிக்கும் கைபந்தாயிரு...


எண்ணங்களிலுள்ள தாழ்வு
மனப்பான்மையால் திறமைக்கு
தடை போடாதீர்கள்....
முடியும் என்ற சொல்லே
மந்திரமாய்....
(
நம்பிக்கை )


மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே,
தோல்வி பல கடந்து வென்றவர்களே...


தனியே நின்றாலும்
தன் மானத்தோடு...
சுமையான பயணமும்
சுகமாக....
(
நம்பிக்கை)


எனக்கு பிரச்சினை என்று
ஒரு போதும் சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால்
பயமும் கவலையும் வந்து விடும்
எனக்கு ஒரு சவால்
என்று சொல்லி பாருங்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும்
தானாக வந்து விடும்...


தோல்விகளை தவழும் போது,
ஏமாற்றமென நினையாமல்
மாற்றமென நினையுங்கள்...
பாதிப்பு இருக்காது...
உங்களுக்கும் மனதிற்க்கும்...
இதுவும் கடந்து போகும்


ஒவ்வொரு நாளும்
வெற்றி பயணத்தை
தொடங்கிவிட்டேன் என்று
முதலடி எடுத்து வை


வெற்றிபெறும் நேரத்தைவிட
நாம் மகிழ்ச்சியுடனும்
நம்பிக்கையுடனும்
வாழும் நேரமே
நாம் பெறும்
பெரிய வெற்றி


தேவைகளுக்கான தேடலும்,
மாற்றத்திற்க்கான முயற்சியும்,
வாழ்க்கைக்கான யுக்தியும்,
உன்னால் மட்டுமே
உருவாக்க முடியும்...
(
தெளிவும்-நம்பிக்கையும்)


எதிரி இல்லை
என்றால்
நீ இன்னும்
இலக்கை நோக்கி
பயனிக்கவில்லை
என்று அர்த்தம்


அனுபவம் இருந்தால்
தான் செய்ய முடியும்
என்பது எல்லா
வற்றுக்கும் பொருந்தாது
முதன் முதலில்
தொடங்க
படுவதுதன்னம்பிக்கை
சம்பந்தப்பட்டது...


நம்பிக்கையின் திறவுகோல்
தன்ன(ந)ம்பிக்கையே


மனதில் உறுதியிருந்தால்
வாழ்க்கையும்
உயரும் கோபுரமாக...


முயற்சி தோல்வியில்
முடிந்தாலும்
செய்த பயிற்சியின்
மதிப்பு குறையாது


விழுந்தால் எழுவேன்
என்ற நம்பிக்கையிருக்க வேண்டும்
யாரையும் நம்பிஏறகூடாது
வாழ்க்கையெனும் ஏணியில்...


வாய்ப்புகள் நம்மை
கடந்து சென்றாலும்
தொடர்ந்து முயற்சியுடன்
பின் தொடர்ந்தால்
திரும்பி பார்க்கும்
நாம் விரும்பிய படியே...
(
நம்பிக்கையுடன்)


உன்னையே நீ நம்பு
ஓர் நாள் உயர்வு நிச்சயம்...!


வியர்வை துளியை
அதிகப்படுத்து
வெற்றி வந்தடையும்
வெகு விரைவில்
(
உழைப்பே - உயர்வு)


முடியாது
என எதையும்
விட்டு விடாதே...!
முயன்றுபார்
நிச்சயம்முடியும்...


இழந்த அனைத்தையும்
மீட்டுவிடலாம் நம்பிக்கையை
இழக்காதிருந்தால்


அனைத்தையும்
இழந்தபோதும்
புன்னகை பூத்திருக்கு
மீள்வோமென்ற
நம்பிக்கையில்


தொடர்ந்து முயற்சி செய்து
கொண்டே இருங்கள்
தோல்வி கூட ஒரு நாள்
இவஅடங்கமாட்டானு
நம்ம கிட்ட தோற்றுவிடும்


வயதை பின்னுக்கு தள்ளி
வைராக்கியத்தோடு வாழும்
வயதானவர்கள் ஒவ்வொரு
வீட்டின் தன்னம்பிக்கை நாயகர்கள்...!


எல்லாம் இருந்தாலும்
இல்லை என்பார்கள்பலர்
எதுவும் இல்லை என்றாலும்
இருக்குஎன்பார்கள் சிலர்
(தன்னம்பிக்கை)


நம் பிரச்சனைகளை
நாமே தீர்துக்கொள்ளும்
போது
மனவலிமையும் நம்பிக்கையும்
இன்னும் அதிகரிக்கின்றது


எல்லாமே நம்ம நேரம்
எல்லாமே நம்ம நேரம்
சொல்லும் விதத்தில்
தான் உள்ளது
(தன்னம்பிக்கை)


விடாமுயற்சி
என்ற ஒற்றை நூல்
சரியாக இருந்தால்
வெற்றி எனும் பட்டம்
நம் வசமே


வெற்றி
கதைகளை என்றும்
படிக்காதீர்கள் அதிலிருந்து
உங்களுக்கு தகவல்கள்
மட்டுமே கிடைக்கும்
தோல்வி கதைகளை
எப்போதும் படியுங்கள்
அது நீங்கள்
வெற்றி பெறுவதற்கான
புதிய எண்ணங்களை கொடுக்கும்


வானவில்
தோன்றும் போது
வானம் அழகாகிறது
நம்பிக்கை
தோன்றும் போது
வாழ்க்கை அழகாகிறது


உனக்கு
இன்று ஏற்பட்ட
துன்பங்களுக்காக
மனம் வருந்தாதே
ஏனெனில்
அது தான்
உனக்கு வருங்காலத்தில்
எதையும் தாங்கும்
வலிமையான இதயத்தை
அளிக்கப் போகிறது
துணிந்து செல்
துணிவுடன் வென்று
விடலாம் வாழ்க்கையை


தோற்றுக் கொண்டே
இருந்தாலும் கவலைப்படாதே
நிச்சயம் ஒரு நாள்
வெற்றி பெறுவாய்
மனதில் உறுதியை
மட்டும் வை
கனவுகள் நனவாகும்
காலம் வரும்


திறமையும் நம்பிக்கையும்
இருந்தால்
கண்டிப்பா வாழ்க்கையில்
ஜெயிக்க முடியும்


ஒரு நாள் விடியும்
என்று காத்திருக்காமல்
இன்றே முடியுமென
முயற்சி செய்
வேதனைகளும்
வெற்றிகளாக மாறலாம்


தனித்து பறக்க
றெக்கைகள் முளைத்தால்
மட்டும் போதாது
மனதில் தன்னம்பிக்கையும்
தைரியமும் முளைக்க வேண்டும்


எப்போதும்
நம் மனதில்
உச்சரிக்க வேண்டிய
வாக்கியம்
என்னால் முடியும்


ஒவ்வொரு நொடியும்
உன் வாழ்க்கையில்
வெற்றிக்காக போராடு
ஆனால்
அந்த வெற்றியில்
பிறரின் துன்பம் மட்டும்
இருக்கவே கூடாது
என்பதில் உறுதியாக செயல்படு


காலம் பதில்
அளிக்கும் என்று
கடிகாரம் ஓடாமல் நிற்பதில்லை
பிரச்சனைகளை கண்டு
காலத்தை குறை சொல்லி
நாம் எதற்கும்
காத்திருக்க வேண்டியதில்லை
துணிந்து செல்பவனுக்கு
எப்போதும் வெற்றி தான்


எதிலும் பயம் அறியாமல்
முற்றிலும் தன் திறமையை
கொண்டு
விவேகமாக செயல் பட
தெரிந்தவனே
எல்லாவற்றிலும்
திறமைசாலியாக இருந்து
வெற்றிகளை பறிக்கின்றான்
எப்போதும் தன்னால் முடியும்
என்று முந்துபவற்கே முதல் பரிசு


சிறகுகள் நனைந்தால்
பறக்க முடியாதுதான்
ஆனால்
எந்த ஒரு பறவையும்
வானத்திடம் மழையே பெய்யாதே
என்று கெஞ்சுவது இல்லை
வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்
போராடுவோம் வெற்றி பெறுவோம்


வாழ்க்கையில் தகுதி
உள்ளவனைக் காட்டிலும்
தன்னம்பிக்கை உள்ளவனே
வெற்றி பெறுகிறான்


எவ்வளவு இடர்ப்பாடுகள்
வந்தாலும்
கலங்கி நின்று
நேரத்தை விரயமாக்காமல்
நம்மால் முடியும்
என்ற நம்பிக்கையே
வெற்றியை நிலை
நாட்ட முடியும்


தடைகள்
ஆயிரம் வந்தால் என்ன
அடியெடுத்து வைத்து
முன்னேறி விடு
வாழ்க்கை வசப்படும்


நம் நிலை கண்டு
கைகொட்டி சிரித்தவர்களை
கை தட்டி பாராட்ட
வைப்பதே வெற்றிகரமான வாழ்க்கை


நம்மால் முடிந்தவரை
செய்வதல்ல முயற்சி
நினைத்த செயலை
வெற்றிகரமாக முடிக்கும் வரை
செய்வதே உண்மையான முயற்சி


மற்றவர்கள்
தோள் மீது
ஏறி நின்று
தன்னை உயரமாக
காட்டிக் கொள்வதை விட
தனித்து நின்று
தன் உண்மையான உயரத்தை
காட்டுபவனே
சிறந்த தன்னம்பிக்கையாளன்


பயமும் தயக்கமும்
உள்ளவர்களிடம்
தோல்வி வந்து
கொண்டே இருக்கும்
பயத்தையும் தயக்கத்தையும்
தூக்கிப்போடுங்கள்
வெற்றி உங்கள் காலடியில்


எங்கு நீங்கள்
தவிர்க்கபட்டீர்களோ
அவமானம் செய்யப் பட்டீர்களோ
அங்கு நீங்கள்
தவிர்க்க முடியாத சக்தியாக
உருவெடுப்பது தான்
உண்மையான வெற்றி


மலையைப் பார்த்து
மலைத்து விடாதே
மலை மீதேறினால்
மலையும் உன் காலடியில்
முயற்சி உனதானால்
வெற்றியும் உன் வசமே


ஆசை நிராசையாகலாம்
லட்சியங்கள் அலட்சியப்படுத்தலாம்
பயிற்சியில் குறையிருக்கலாம்
முயற்சியில் தோல்வியடையலாம்
ஆனால் ஆசைப்பட்ட
லட்சியங்களை அடைய
நீ செய்யும் பயிற்சியும்
அதில் வெற்றியடைய
நீ செய்யும் முயற்சியையும்
கை விடக்கூடாது என்ற
தன்னம்பிக்கை மட்டும்
இழந்து விடாதே
வெற்றி உன் காலடியில்
என்பதை மறவாதே


நம்மைநாமே
செதுக்கிக்கொள்ள
உதவும் உளி இலக்கு
தன்னம்பிக்கை
விடாமுயற்சி


எட்ட முடியாத
வானம் கூட உயரமில்லை
நீ எட்ட வேண்டும்
என்று முயற்சிக்கும்
உன் தன்னம்பிக்கையின்
முன்னால்


நம் வளர்ச்சியைத்
தடுக்க எப்போதும்
எதிர்ப்புகள் வரும்
அதை எதிர்த்துப்
போராடினால் தான்
முன்னுக்கு வர முடியும்


நேரத்தை வீணாக்காதே
உன்னால் முடியும்
சாதித்து கொண்டே
இரு வாழ்வில்


வெற்றியாளரின் பாதையில்
சென்று விரைவில்
வெற்றி அடைவதைக் காட்டிலும்
உனக்கென
ஒரு பாதையை உருவாக்கு
அதில் நம்பிக்கையுடன் பயணப்படு
நிச்சயமாக வெற்றி உன் வசமே
உன் வழியில்
உன்னை பின்பற்றி வர
பலர் காத்துக் கிடப்பார்கள்


எல்லை இல்லாத
வானத்தையும் அளக்கலாம்
எண்ணிக்கை கொள்ளாத
விண்மீன்களையும் எண்ணலாம்
எட்ட முடியாத நிலவையும்
எட்டி விடலாம்
முடியும் என்று
விடா முயற்சி செய்தால்
வெற்றி எனும்
மணி மகுடம்
உன் சிரம் தாங்கிடலாம்


தோல்வி அடைந்ததும்
துவண்டு போகாமல்
தோல்வி தற்காலிகமானது மட்டுமே
நிரந்தரமானதும் அல்ல
நிலைக்க வைக்கும் அளவிற்கு
நான் திறமை இல்லாதவனும் அல்ல
என்று முயற்சி கொண்டு போராடுங்கள்
வெற்றி உங்களுக்கு நிரந்தரமாகும்


உன்னை நீயே
யாருடனும் ஒப்பிடாதே
உன் சிறப்பு
எது என்பதை
நீயே உணராத பட்சத்தில்
மற்றவர்கள் அறிவது
என்பது எப்படி
சாத்தியம் ஆகும்


எதை காரணம் காட்டி
உங்களை நிராகரித்தார்களோ
அதை நிவர்த்தி செய்து
ஒரு நிமிடமாவது
அவர்கள் முன்
நிமிர்ந்து நின்று
கடந்து விடு


என்னால் முடியும்
என்ற நம்பிக்கை கொண்ட
மனிதன் யாவரும்
அடுத்தவர்களின் உதவியை
நாடுவதில்லை


முதல் முயற்சி
தோல்வி என்றால் என்ன
மீண்டும் மீண்டும்
முயற்சி செய்யுங்கள்
தோல்வியை வென்றுவிடலாம்
வெற்றியால்


பாதைகளில் தடைகள்
இருந்தால்
அதை தகர்த்து
விட்டு தான்
செல்ல வேண்டும் என்றில்லை
தவிர்த்து விட்டும் செல்லலாம்
எறும்பை போல


இன்று நாம்
பேசநினைக்கும் கருத்துக்களை
சிலர் உனக்கு
என்ன தெரியும் என்று
நம்மை தடுத்துவிடுவார்கள்
அதற்கு வருந்தாதீர்கள்
காலத்தின் வட்டத்தை
நம்புங்கள்
அந்நாள்
நம் கருத்துக்கள் தான்
கை ஓங்கி நிற்கும்


இன்பமும் துன்பமும்
எல்லாம்
இறைவன் கட்டளையே
கஷ்டங்களை கொடுத்தவர்
அதற்கான தீர்வையும்
கொடுப்பார்
தன்னம்பிக்கையை ஒருபோதும்
சிதற விடாமல்
மன வலிமையோடு
எதிர்க் கொள்வோம்


பிரச்சினைகள்
நம்மை செதுக்க
வருவதாக நினைத்து
எதிர் கொள்ளுங்கள்
சிதைந்து போகாதீர்கள்


நமக்கு பிடித்த ஒன்றை
அடைந்தே தீரவேண்டும்
என்ற பிடிவாதத்தை
பிடிவாதமாக
பிடித்துக்கொள்வதில்
இருக்கிறது நமது தன்மானம்


உனது நேற்றைய
தோல்விக்கான
காரணங்களை கண்டறிந்தால்
மட்டுமே
வெற்றியை நோக்கி பயணம்
செல்கையில் வரும் தடைகளை
உடைத்தெறிய முடியும்


அடுத்தவர்களின்
கற்பனைகளுக்கு
பதில் சொல்ல வேண்டிய
அவசியம் இல்லை
நம்மை பற்றி
நமக்கு தெரியாததா
அவர்களுக்கு
தெரிந்து விடப்போகிறது


ஓய்வில்லாமல் உழைப்பதால்
தான் கடிகாரம்
உயர்ந்த இடத்தை
அடைந்தது
நாமும் உயர வேண்டும்
என்று தன்னம்பிக்கை கொண்டு
உழைத்தால்
நிச்சயமாக உயரலாம்


துன்பமும்
தோல்விகளும்
நாம் விரும்பாமலே
நம்மைத்தேடி
வந்ததைப்போல்
நாம் விரும்பிய மகிழ்ச்சியும்
ஓர்நாள் வந்தே சேரும்
நம்பிக்கையுடன்
நடைப்போடுவோம்


எதிர்காலம் என்பது
முக்காலத்தில்
ஒரு காலம் மட்டுமல்ல
நம்மை ஏளனமாக
பேசும் சிலருக்கு
நம்மை நிரூபித்துக் காட்ட
இறைவன் கொடுத்த பொற்காலம்


சூரியன் உதிக்கும் போது
பிரகாசமாக காட்சியளிக்கும்
நான் வந்துட்டேன் என்று
பிரமாண்ட ஒளியுடன்
அதே போல்
நம்மை மட்டம் தட்டுபவர்கள்
முன் சூரிய ஒளியைப் போல்
பிரமாண்டமாக
சாதித்து காட்ட வேண்டும்


ஓர் இலக்கை
அடைய வேண்டும் என்றால்
அதில் வரும்
வலி மற்றும் வேதனைகளை
அனுபவித்து தான்
கடக்கவேண்டும்
அப்போதுதான்
நம் தன்னம்பிக்கையின்
பலம் மற்றும் பலவீனத்தை
உணரமுடியும்


நம்மால் முடியவில்லை என்றால்
அதனை சவாலாக
எடுத்துக் கொள்ளுங்கள்
வலியுடன் கிடைக்கும் வெற்றிக்கு
அதிக மதிப்புண்டு


வேடிக்கை பார்ப்பவர்கள்
என்ன நினைத்தால் என்ன
நகர்ந்து கொண்டே இருப்போம்
நல்லதோ கெட்டதோ
நடப்பது நமக்குத் தான்

Motivational Quotes in Tamil

Motivational Quotes in Tamil

Motivational Quotes in Tamil

Ajith kumar Motivational Quotes in Tamil

thalapathy vijay Motivational Quotes in Tamil

Walt disney Motivational Quotes in Tamil

Walt disney Motivational Quotes in Tamil

Motivational Quotes in Tamil

Ajith kumar Motivational Quotes in Tamil

 

 

 

Post a Comment

Previous Post Next Post