யாழ் இருபாலை பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை விஞ்ஞான பாட ஆசிரியர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது இரு மாணவர்களுக்கு இடையில் புத்தகப்பை தொடர்பில் இழுபறி ஏற்பட்டதாகவும் ஒரு மாணவனை அழைத்த ஆசிரியர் தாறுமாறாக தடிகள் கைகளாலும் தாக்கியதாகவும் தெரிய வருகிறது. குறித்த ஆசிரியர் புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் விஞ்ஞான பாடம் கற்பிப்பவர் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து கோப்பாய் போலீசார் குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர் இருப்பினும் அந்த ஆசிரியை நீதிமன்றத்திற்கு செல்லவிடாது பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் அறிய கிடைத்துள்ளது. குறித்த ஆசிரியரை இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
Post a Comment