ரணில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலக வேண்டும் சம்பிக்க கோரிக்கை

 

ரணில்  ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை  பதவியிலிருந்து விலக வேண்டும் சம்பிக்க  கோரிக்கை

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி அமைக்க விரும்பினால் ரணில் விக்ரமசிங்க தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சம்பிக்க தெரிவித்துள்ளது இவ்வாறானதொரு சூழ்நிலையில் ருவான் விஜயவர்த்தன ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் 

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்க வேண்டுமா என்பதை ஐக்கிய மக்கள் சக்திதான் தீர்மானிக்க வேண்டுமென அவர் கூறினார் இதே வேளை மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைகளை குறிப்பிட்டு அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தாம் முழுமையாக நம்பவில்லை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஜனாதிபதி திசாநாயக்க ஆதரவளிக்க நான் தயங்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் இலங்கையின் தற்போதைய கடன் நெருக்கடி கடன் மறுசீரமைப்பை இறுதி செய்வது திருப்பிச் செலுத்தும் சுமைகள் அதிகரிப்பதால் மேலும் சவால்களுக்கு வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார் எவ்வாறாயினும் இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளை சமநிலைப்படுத்தி அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையை பேணுவதற்கு ஜனாதிபதி திசாநாயக்கர் நன்றாக செயல்படுவார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment

Previous Post Next Post